Saranya hema heroes...
 
Notifications
Clear all

[Sticky] Saranya hema heroes reminiscenes

2 Posts
2 Users
7 Reactions
302 Views
Amirtha Seshadri
(@amirthababu)
Member Moderator
Joined: 4 days ago
Posts: 2
Topic starter  
Loading spinner

Post by Gayathri

 

Saranya Hema ஆத்தரே.....

நான் படிச்ச முதல் கதை தேன் மொட்டு கோலங்கள்.

சொக்கரே அப்படின்னு மதுரயாழினி கூப்பிடுறப்போ நாமளுமே சொக்கி கிடப்போம்...

எனக்கு அதுல ரொம்ப பிடிச்ச சீன்ஸ் - ஒரு கல்யாணத்துல சொக் கூட செல்பி எடுத்து அதை காந்திமதி பாட்டிக்கு அனுப்பினது.

கல்யாணம் பேசி ஊருக்கு கிளம்பும் போது சொக் கோவில்ல யாழினிய மீட் பண்ணுறது அத பார்த்து அவ அப்பா டென்ஷன் ஆகுறது...

கல்யாண மேடைல ரெண்டு பேரும் க்ளோஸா பேசிக்கிறத பார்த்து அகிலன் வருத்தப்படுறது.. தட் கல்யாண புடவை....

அதியோட மேகாடா ன்கிற விளிப்பு... அந்த வாய்ஸ் நோட்ட அவ கேட்டு கேட்டு தவிக்கிறது....

ரிதுவோட கண்ணத்தான்... ஆத்மா வண்டில ஏற செய்யுற சர்க்கஸ்... அத எல்லாரும் வேடிக்க பார்க்கிறது.... அந்த ஜிமிக்கி ... அந்த ஹேப்பி பர்த்டே ரிது ....

குரு ஆர்யனோட அடாவடி கல்யாணம் அப்புறம் அவனோட குட்நைட்...

ஆழினி தனகுள்ள வச்சிட்டு தவிக்கிற அந்த சொல்ல முடியாத காதல்.....

கெளரவ் & ஆகர்ஷனோட உணர்வு போராட்டம் ...
ஆகர்ஷனோட காதல ப்ரத்யூ விமானத்துல உணர்றதருணம்...
காதல் சொல்ல ப்ரத்யூ வெயிட் பண்ணுறது....

அனென்ய்யா - ப்ரத்யூ பாண்டிங்

அதிகம் பேசாமலே கெளரவ் அவனோட தங்கமான வெண்ணிலாவ அவன நோக்கி ஈர்க்க வைக்கிற விதம்....

விக்ரம் - சாருக்கு ஹாஸ்பிட்டல்ல தங்க வெண்ணிலா சாப்பாடு ஊட்டி விடுறது....

அதிகாலையில ப்ரணித்தாவ மீட் பண்ண ஆவுடையப்பன் வருவது அப்புறம் போகிறப்போ அவ போன் எடுக்கலன்னு வீட்ல போட்டு குடுக்குற சீன்....
தீரா ஆராக்கு வாங்குற பட்டர் பிஸ்கட்.... அவளோட ப்ரெக்னன்ஸி ரீவில் பண்ண தவிக்கிற தவிப்பு....

இந்து - பூமி - ஆரா பாண்டிங்

நிஷா ஆதிய தண்ணிகுள்ள காணாம தேடி தவிக்கிறது.... திரும்ப அவன் மேல வந்தோன பளார் பளார்ன்னு அறையிறது.
வீங்குன கன்னத்துக்கு மஞ்சள் பத்து போடுறது...

அர்ணவ் மூல்லையோட எதார்த்த வாழ்க்கை.... அவள அம்மா வீட்டுக்கே விடாம பண்ணுற அலம்பல்.... அன்னகிளிகிட்ட அர்ணவ் பத்தி குற்றபத்திரிக்கை வாசிக்க...... அத அன்னகிளி அவன்கிட்ட சொல்லுற அந்த ஹாஸ்பிட்டல் சீன்..... அர்ணவ் - அரும்பு பாண்டிங்....

ஏர்போர்ட்ல வச்சு தர்ஷிய திரு பேசி முடிக்க சொல்லுறது .... அவன் அவளுக்கு மட்டுமே காட்டும் ப்ரத்யோக முகம்.... US ல அவன காணாம தவிக்க அப்புறம் அவள பார்த்தோன மொழி அவள தூக்கி சுத்தறது...

ஹரி தீக்ஷீய கோவில்ல பாக்கிறது.... அவள US ல சமாதன படுத்துறது... அந்த ஏர்போர்ட் சீன்... சுகன்யா சித்தியோட தட் பூசணிக்காய் சிதறல் சீன்..... 4 வருஷம் அவள நினைச்சு தவிக்கறது.... தட் மீசை பனிஷ்மென்ட்..

கங்கை கரையில விமல் தோள்ல நிகி சாய்றது... அவனுக்காக அவ பாட்டு கத்துக்கறது....

மனு -சோபி லவ்... சோபி யோட innocence....

தமிழ் - தென்றல் புரிதலான வாழ்கை அந்த 40 சேலை.....
தென்றல் - சூடாமலர் பாண்டிங்

சௌபி சொல்லாமலே ரிஷபன் அவளோட காதல்ல உணரும் தருணம்... தட் பீச் சீன்..... அவளுக்கு பொக்கே குடுத்திட்டு போறது.... அவன் வேற யாரையே கல்யாணம் பண்ணிக்க போறான்னு நினைச்சு அவன்கிட்ட சண்டை போட போய் அப்புறம் கிஸ் பண்ணிட்டு வர சீன்....

பார்த்திவ் ஸ்ருதிகிட்ட ப்ரோபஸ் பண்ணுனது... தட் மோளே என்ற விளிப்பு .... ஸ்ருதி- அஷ்வினி பாண்டிங்....

அகன் மாமாவோட (சாந்தசொரூபமான நடிப்பு) சஹானவோட innocence .... ஏலக்காய் டீ... ரே - சஹா பாண்டிங்.... சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பல்லவி Conversation.... பல்லவி சொன்னத வச்சி ஐயப்பன் சரவணன பாக்குற பரிதாப பார்வை....
அகன் பொறுமையா சஹாக்கு புரிய வக்கிற விதம்....

என் ஆஸ்தான நாயகி சுபியோட டைமிங் டைலாக்ஸ்.... நெல்ஸ் கிட்ட டஸ்கிக்கு வக்கிற வேண்டுதல் ... அஷு - சுபி பாண்டிங் ... round Chappathi .... வேண்டுதல் பத்தி ஸ்பிக்கர்ல் ல பேசி ரெண்டு பேரும் மாட்டுறது.... தட் கொடி முந்திரி தோட்ட டேட்டிங்....

ஓரளவு கவர் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்... மீதம் இருந்தால் அடுத்த போஸ்ட்டில் தொடரும்....


   
Quote
Gayathri
(@gayathri)
New Member
Joined: 3 days ago
Posts: 1
 
Loading spinner

நன்றிகள் க்கா😁😁😁


   
ReplyQuote
Share:

error: Content is protected !!